மழைநீர் தேங்கி நிற்கும் இடங்கள் முன்பு என்னவாக இருந்தது என ஆய்வு: அமைச்சர் முத்துசாமி

மழைநீர் தேங்கி நிற்கும் இடங்கள் முன்பு என்னவாக இருந்தது என ஆய்வு: அமைச்சர் முத்துசாமி
X

ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சர் முத்துசாமி.

மழைநீர் தேங்கி நிற்கும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் முன்பு என்னவாக இருந்தது என ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோடு அடுத்த சித்தோட்டில் பூங்கா சீரமைப்பு பணிகளை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்தறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: சென்னையில் பெய்த பெரு மழையின் காரணமாக வெள்ள நீர் வடியாமல் உள்ளதற்கு குளம் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் காரணமா என்று எழுப்பிய கேள்விக்கு, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அதனை செம்மைப்படுத்தவும் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் முன்பு என்னவாக இருந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தற்பொழுது புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்படும். அனுமதிகள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு வழங்கப்படுகிறது. பழைய கட்டிடங்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


Tags

Next Story
ai marketing future