ஈரோடு கிழக்கு எம்எல்ஏ திருமகன்ஈவெரா மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு

ஈரோடு கிழக்கு எம்எல்ஏ திருமகன்ஈவெரா மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு
X
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார்.

ஈரோடு திருமகன் ஈவெரா MLA ஈரோடு மாநகராட்சி 43 வது வார்டில் அமைந்துள்ள SKC சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆய்வு பணிக்கு சென்றார், இப்பணியின் போது நடுநிலைப் பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகள் கட்டவும், கணினி மயமாக்கப்பட்ட ஆய்வுக்கூடம் கட்டவும் ஸ்மார்ட் வகுப்புகள் தரத்தை மேம்படுத்திக் கொடுக்கவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பரிந்துரைத்தார். மேலும் கழிப்பிட வசதிகள், பள்ளிக்கு மின்சாதனங்கள், மூன்றடுக்கு மின்னிணைப்பு போன்றவற்றை ஏற்படுத்தி தர கேட்டுக் கொண்டார். மற்றும் பள்ளிக்கு தூய்மைப் பணியாளர் நியமிக்க வேண்டும், இரவுக் காவலர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறினார்.

பள்ளியின் சாலையோரத்தில் விழும் நிலையில் இருந்த மரங்களை அப்புறப்படுத்தி விபத்தினை தடுத்திடும் படி தாசில்தாரிடம் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில்நடுநிலைப் பள்ளி ஆசிரியைகள் ஊழியர்கள் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story