ஸ்கேட்டிங் போர்டு மீது ஒற்றைக்காலில் நின்று தலையில் டம்ளர்வைத்து மாணவி யோகாசனம்

ஸ்கேட்டிங் போர்டு மீது ஒற்றைக்காலில் நின்று தலையில் டம்ளர்வைத்து  மாணவி யோகாசனம்
X
ஸ்கேட்டிங் போர்டு மீது ஒற்றைக்காலில் தலையில் டம்ளரில் தண்ணீர் வைத்து 17 நிமிடங்கள் யோகா செய்தது அனைவரையும் ஈர்த்தது

ஸ்கேட்டிங் போர்டு மீது ஒற்றைக்காலில் தலையில் டம்ளரில் தண்ணீர் வைத்துக்கொண்டு 17 நிமிடங்கள் யோகா செய்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

ஈரோட்டில் நோபில் உலக சாதனைக்காக தொடர்ந்து பலவிதமான சந்திர நமஸ்காரம் செய்யும் யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த யோகசனம் நிகழ்ச்சியில் 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர் சிறுமிகள் 200 பேர் கலந்து கொண்டனர். 200 பேர் 16 நிமிடங்கள் தொடர்ந்து 17 விதமான சந்திர நமஸ்காரத்தை 50 முறை செய்து உலக சாதனை நிகழ்த்தினர்.

இந்த சாதனைக்காக 3 மாதங்கள் பயிற்சி எடுத்த சிறுவர் சிறுமிகளுக்கு நோபில் உலக சாதனை நிறுவனத்தின் சார்பில் சான்றிதழ்களை மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி.சரஸ்வதி வழங்கினர். தொடர்ந்து ஸ்கேட்டிங் போர்டு மீது ஒற்றைக்காலில் தலையில் டம்ளரில் தண்ணீர் வைத்துக்கொண்டு 17 நிமிடங்கள் யோகா செய்ததை கண்ட மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. சரஸ்வதி பாராட்டு தெரிவித்தார்.

Tags

Next Story