கோவிலின் நகைகளை உருக்கும் அரசின் முடிவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கோவிலின் நகைகளை உருக்கும் அரசின் முடிவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.

கோவிலின் நகைகளை உருக்கும் அரசின் முடிவிற்கு எதிராக வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவிலின் நகைகளை உருக்கும் அரசின் முடிவிற்கு எதிராக ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜெகதீசன் தலைமை வகித்தார். இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் சக்தி முருகேஷ் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, கடவுளுக்கு சொந்தமான நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் சேமிப்பு செய்ய போவதாக அறிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்காக கடவுளுக்கு அளிக்கப்பட்ட நகைகளை உருக்குவது என்பது பக்தர்களின் இறை நம்பிக்கையை புண்படுத்தும் செயலாகும். கோவில் மீதும் கடவுள் மீதும் நம்பிக்கை இல்லாத அரசு கோவில் நகைகள் மீது மட்டும் நம்பிக்கையும், ஆசையும் வைப்பதன் உள்நோக்கம் தான் என்ன? கோவில் நகைகளின் உண்மையான இருப்பு ஆவணப்படுத்தாத நிலையில் இதில் எவ்வளவு தங்கம் வங்கிகளில் சேமிப்பு ஆகும்? அரசியல்வாதிகளின் பாக்கெட்டுகளில் எவ்வளவு போகும்? என்று கூறினார்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சங்கர், வக்கீல் முரளி, கார்த்தி, ரமேஷ் மற்றும் மாவட்ட நகர், ஒன்றிய பொறுப்பாளர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story