தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
X

ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.

ஈரோட்டில் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

ஈரோட்டில் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் மாநில தலைவர் சிவப்பிரகாசம் கூறியதாவது:

தமிழ்நாடு வனத்துறை பாதுகாப்பு குழுவில் உள்ள ஐஎப்எஸ் அதிகாரிகளை நீக்கம் செய்து ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். ஊழல் புகார் சுமத்தப்பட்ட வேலூர் வனபாதுகாவலர் சுஜாதா மற்றும் ஈரோடு வனபாதுகாவலர் நிகாரஞ்சன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 30 சதவீத காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பிரச்சனை அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தி சரியான முறையில் நிர்வாகம் செய்ய பணியிடங்கள் நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
ai automation digital future