பாட்னாவில் இருந்து நேரடியாக ஈரோடுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

பாட்னாவில் இருந்து நேரடியாக ஈரோடுக்கு சிறப்பு ரயில் இயக்கம்
X

ஈரோடு ரயில் நிலையம்.

பாட்னாவில் இருந்து நேரடியாக ஈரோடுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் இருந்து ஈரோடு ரயில் நிலையத்திற்கு நேரடியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்து இயக்கப்படும் இந்த ரயில், இன்று (திங்கட்கிழமை) மதியம் 2 மணிக்கு பாட்னாவில் இருந்து, சிறப்பு ரயில் புறப்படுகிறது. பாட்னா சாகபில் இருந்து கிளம்பும் இந்த ரயில் பக்தியர்பூர், மதுபூர், சித்தரஞ்சன், பங்குரா, ஜெய்ப்பூர் கே.ரோடு, கட்டாக், பழசா, விசாகப்பட்டணம், ராஜமுந்திரி, விஜயவாடா, பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் வந்தடைகிறது. இந்த தகவல் சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story