ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி: தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி:  தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது
X

ஈரோடு கிளைச்சிறை.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு சூளை சி.எஸ். நகரை சேர்ந்தவர் வள்ளல் பாபு. தொழிலதிபரான இவர் ஈரோடு கங்காபுரத்தில் சோப்பு தயாரிக்கும் நிறுவனம் உள்பட சிறு சிறு நிறுவனங்களை நடத்தி வந்தார். மேலும் ஈரோடு அசோகபுரம் மெயின் ரோட்டில் ஏலச் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். தினசரி வசூல், வார வசூல், மாத வசூல் என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தார். 250-க்கும் மேற்பட்ட மக்கள் இவர் நடத்தி வந்த ஏலச்சீட்டில் பணம் செலுத்தி வந்தனர்.

இவர்களுக்கு ஏலச் சீட்டு பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். கிட்டத்தட்ட ரூ. 10 கோடி வரை இவ்வாறு மோசடி நடந்துள்ளது. இதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தனர். பின்னர் இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் திடீரென தலைமறைவானார். இந்நிலையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தங்களது பணத்தை திருப்பித்தர வலியுறுத்தியும், தலைமறைவாக இருக்கும் தொழிலதிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பவானி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் இது குறித்து புகார் செய்தனர். தொடர்ந்து குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஏலச் சீட்டில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து தலைமறைவாக இருக்கும் தொழில் அதிபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் வீரப்பன் சத்திரம் போலீசார் தலைமறைவாக இருந்த தொழிலதிபர் வள்ளல் பாபுவை கைது செய்தனர். இன்று தொழிலதிபர் வள்ளல் பாபு சம்பத் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil