ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு
X

மீட்கப்பட்ட முதியவர்.

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி ஆறு பாலத்தின் மீது இருந்து அதே பகுதியை சேர்ந்த முதியவர் முருகேசன் என்பவர் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை தொடர்ந்து கருங்கல்பாளையம் போலீசார் அவரை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக நேற்று இதே பாலத்தின் மீது இருந்து திருச்செங்கோடு தனியார் கார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யும் சம்பவம் நிகழ்ந்து வருவதால், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!