குடியரசு தின விழா: ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்

குடியரசு தின விழா: ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்
X

ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்.

73 வது குடியரசு தின விழாவை ஒட்டி ஈரோடு வ உ சி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்.

நாட்டின் 73 குடியரசு தினவிழாவை ஒட்டி நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் காரணமாக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி வஉசி மைதானத்தில் கொடியேற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 229 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக வழக்கமாக நடக்கும் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!