/* */

துரிதகதியில் நடைபெறும் ஈரோடு பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு பேருந்து நிலையம் புனரமைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

துரிதகதியில் நடைபெறும்  ஈரோடு பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி
X

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு பேருந்து நிலையம் புனரமைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 60 ஆண்டுகளுக்கு முன்பாக ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் ஈரோடு பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. சேலம், மதுரைக்கு என்று தனியாக ரேக்குகள், மாநகர பஸ்கள் வந்து செல்ல தனியாக ரேக்குகள், கோயம்புத்தூர் ,சென்னை பஸ்கள் நிற்க தனியாக ரேக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனைச் சுற்றியும் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் சில ரேக்கு பகுதிகளில் விரிசல் விழுந்து கட்டிடங்கள் வலிமையற்று காணப்பட்டது. இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் ரூ.43 கோடி மதிப்பில் ஈரோடு பஸ் நிலையம் விரிவுபடுத்தும் பணி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. முதற்கட்டமாக சேலம் ரேக்குகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. சத்தி ரோடு பகுதியில் இருந்த பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம், வடக்கு போக்குவரத்து அலுவலகம், சிந்தாமணி கட்டிடம், தங்கும் விடுதி, 30-க்கும் மேற்பட்ட கடைகள் முதல் கட்டமாக இடித்து அகற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து தற்போது அஸ்திவாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. புதிதாக 63 கடைகள் அமைக்கப்பட்டு சத்தி ரோட்டில் இருந்து பஸ்கள் உள்ளே வர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய நுழைவாயில், ஸ்வஸ்திக் கார்னர் வழியாக பஸ்கள் வெளியேற புதிய நுழைவாயல், பஸ் நிலையம் சுற்றி காம்பவுண்ட் சுவர்கள் அமைக்கப்படுகின்றன. நவீன கழிப்பறைகள், பயணிகள் பயன ஓய்வு அறைகள், தங்கும் விடுதிகள், பஸ் நிலையம் சுற்றி நவீன கேமிராக்கள் கட்டப்பட இருக்கின்றன என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 10 Dec 2021 8:41 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  5. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  6. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  7. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  10. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து