மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட மேலாளருக்கு பரிந்துரை: எம்எல்ஏ திருமகன் ஈவெரா

மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட மேலாளருக்கு பரிந்துரை:  எம்எல்ஏ திருமகன் ஈவெரா
X

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆய்வு செய்த காட்சி.

துப்புரவு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவழைத்தனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாநகராட்சி 45 வது வார்டில் அமைந்துள்ள நேதாஜி ரோடு பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா எம்எல்ஏ-வை சந்தித்து தாங்கள் வசிக்கும் பகுதியில் அரசின் மதுபான கடை இருப்பதால் எங்கள் பகுதி முழுவதும் மிகவும் மோசமடைந்துள்ளதாக கூறினார். மேலும் மது வாங்க வருவோர் எவ்வித கொரோனா தடுப்பு நடவடிக்கையின்றி வருவதாலும் மிகுந்த அச்சத்தில் உள்ளோம் என வேதனை தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, மதுபான கடையின் உணவுக் கூடத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள், பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் என எங்கள் தெருவில் அசுத்தமாக காட்சி அளிக்கிறது என புகார் அளித்தனர். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்வதாகவும் வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து திருமகன் எம்எல்ஏ மாநகராட்சி துப்புரவு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவழைத்து பொதுமக்களின் புகார்களை நிவர்த்தி செய்யக் கோரினார்.

இதனடிப்படையில், மேற்கண்ட அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட மேலாளருக்கு பரிந்துரை செய்தார். ஒரு மணி நேரத்தில் பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பிளிச்சிங் பவுடர் மற்றும் கொசு மருந்து தெளிப்பான் தெளிக்கப்பட்டு சுகாதாரம் காக்கப்பட்டு மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story
ai future project