ஈராேடு சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை நிலவரம்
ஈரோட்டில் நேற்று பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பொழிவு இருந்தது.மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளத்தில் 22.3மிமீ மழையளவு பதிவாகியுள்ளது
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பொழிவு இருந்தது. இதில் ஈரோட்டில் 20மிமீரும் கொடுமுடியில் 6மிமீரும் பெருந்துறையில் 9.2மிமீரும் பவானியில் 17மிமீரும் கோபியில் 6.2மிமீரும் சத்தியமங்கலத்தில் 21மிமீரும் பவானிசாகரில் 16.2மிமீரும் தாளவாடியில் 4.8மிமீரும் நம்பியூரில் 2மிமீரும் சென்னிமலையில் 7மிமீரும் மொடக்குறிச்சியில் 5மிமீரும் கவுந்தப்பாடியில் 10மிமீரும் எலந்தன்குட்டைமேட்டில் 4.4மிமீரும் கொடிவேரியில் 9மிமீரும் குண்டேரிப்பள்ளத்தில் 22.3 மிமீரும் என மாவட்டத்தில் மொத்த மழையளவாக 158.1 மிமீரும் மாவட்டத்தின் சராசரி மழையளவாக9.3மிமீரும் பதிவாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu