அதிகாரிகள் குடியிருக்க வழிகாட்டிய இடத்தில் குடியிருக்க விடாமல் தடுத்து வக்கீல் மிரட்டல்

அதிகாரிகள் குடியிருக்க வழிகாட்டிய இடத்தில் குடியிருக்க விடாமல் தடுத்து வக்கீல் மிரட்டல்
X

மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

அதிகாரிகள் குடியிருக்க வழிகாட்டிய இடத்தில் குடியிருக்க விடாமல் தடுத்து வக்கீல் ஒருவர் மிரட்டல் விடுப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் எம்மாம் பூண்டி கிராம மக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளிக்க வந்தனர். அப்புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் பல ஆண்டுகளாக எம்மாம் பூண்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். பட்டியல் இனத்தை சேர்ந்த எங்களுக்கு சொந்த நிலமோ இடமோ இல்லை. இந்நிலையில் அரசுக்கு கோரிக்கை வைத்த பின்னர், அதிகாரிகள் மணியம்பாளையம் என்ற இடத்தில் குடி அமர கூறினர்.

அதனடிப்படையில் நாங்கள் இருந்த அந்த இடத்தை காலி செய்து அதிகாரிகள் காட்டிய இடத்திற்கு குடியமர பணிகளைச் செய்தோம். இதில் தனிநபர் சென்னியப்பன் என்பவர் எங்களை தடுத்து நீங்கள் யார் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள்? உங்களை இங்கு குடி அமர்வதற்கு யார் சொன்னது என மிரட்டும் தொனியில் கேள்வியெழுப்பினார். இதில் ஆட்சியர் விசாரித்து பட்டியலின சமுதாயமான எங்களுக்கு அந்த இடத்தை உறுதி செய்து பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare