கள் போதை பொருள் என நிரூபித்தால் 10 கோடி பரிசு: தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு

கள் போதை பொருள் என நிரூபித்தால் 10 கோடி பரிசு: தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு
X

கள் போதை பொருள் என நிரூபித்தால் 10 கோடி பரிசு காலண்டரை வெளியிட்டு தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு ....

கள் போதை பொருள் என நிரூபித்தால் 10 கோடி பரிசு தருவதாக காலண்டரை வெளியிட்டு தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு.

தமிழ்நாடு கள் இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கள், போதை பொருள் என நிருபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு என அறிவித்து காலண்டரை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பதாகவும், தடையை நீக்க கள் இயக்கம் 17 ஆண்டுகளாக போராடி வருவதாகவும் , ஆனால் எந்த அரசும் இதுவரை கள்ளுக்கு உண்டான தடையை நீக்கவில்லை என்றார். எனவே தமிழ்நாடு கள் இயக்கத்தின் சார்பில் வருகிற ஜனவரி 21 ம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கி விற்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags

Next Story
ai as the future