ஈரோடு கிளை சிறையில் கைதிகளுக்கு கொரோனா
ஈரோடு கிளை சிறையில் இரு கைதிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்
ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஈரோடு கிளை சிறை அமைந்துள்ளது..150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பழமையான சிறை இதுவாகும். உதவி சிறை கண்காணிப்பாளர் உள்பட, பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த சிறையானது 17 அறைகள் மற்றும் 52 கைதிகள் வரை சிறையில் அடைக்கும் வசதி உள்ளது . தற்போது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் 38 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்...
இந்த நிலையில் இன்று கடந்த 15ஆம் தேதி அடிதடி வழக்கில் தொடர்புடைய கோவிந்தராஜ் என்பவருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. அதன்பேரில் நேற்று கோவிந்தராஜ் மற்றும் சிறை வளாகத்தில் இருந்த கைதிகள் பலருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது...
பரிசோதனை முடிவில் கோவிந்தராஜ் மற்றும் இரு கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்...
மேலும் ஈரோடு கிளை சிறையில் சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu