தமிழ்நாடு அரசுவேலைவாய்ப்பு, பயிற்சித்துறை தனித்தேர்வர்களுக்கான முதனிலைத் தேர்வு

ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி.
தமிழ்நாடு அரசுவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தனித்தேர்வர்களுக்கான முதனிலைத்தேர்வு டிசம்பர்-2021 நடைபெறவுள்ளது என ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கைவினைஞர் பயிற்சித்திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால்(NCVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் தொழிற்பயிற்சி நிலையத்திலுள்ள அத்தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுள்ள I,III & IV வகையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு (இரண்டாம் வகையைத் தவிர) முதனிலைத்தேர்வுகள் கருத்தியல் (Theory) பாடத்தில் 14.12.2021 மற்றும் செய்முறை (Practical) தேர்வு 15.12.2021 ஆகிய தேதிகளில் கிண்டிஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இத்துறையால் நடத்தப்படும்.
கருத்தியல் தேர்வில் descriptive Type-ல் இடம்பெறும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் கலந்து கொள்ள இயலும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மற்றும் இரண்டாம் வகை விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஜூன் 2022-இல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் முதல் வருட தேர்வில் தனித்தேர்வராக(Private Candidates) கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து தொழிற் பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு NCVT, புது டெல்லி மூலம் தேசிய தொழிற்சான்றிதழ் (National Trade Certificate) வழங்கப்படும்.
தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம் முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு (Prospectus) நெறிமுறைகள் (Guidelines) மற்றும் இது தொடர்பான பிற விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.200/- செலுத்தியமைக்கான செலுத்துச்சீட்டு(Challan) கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 22.11.2021-க்குள் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu