சாலையில் கிடந்த ரூ. 50ஆயிரம்- போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

சாலையில் கிடந்த ரூ. 50ஆயிரம்- போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
X

 நந்தகுமார், அவரது நண்பரை பாராட்டிய போலீசார். 

சாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரத்தை, போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

ஈரோடு விவிசிஆர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளியான நந்தகுமார், தனது நண்பர்களுடன் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள பொன்வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் பணம் இருப்பதை பார்த்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துவிட்டு, அருகில் இருந்த நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதனிடையே, பணத்தை தவறவிட்ட தங்க நகைக்கடை ஊழியர் சோமசுந்தரம், காவல்நிலையத்தில் பணம் குறித்து விளக்கம் அளித்தார். இதையடுத்து, கீழே கிடந்த 50 ஆயிரம் பணத்தை, டிஎஸ்பி ஆனந்தகுமார் முன்னிலையில் சோமசுந்தரத்திடம் நந்தகுமார் ஒப்படைத்தார்.

Next Story