டாஸ்மாக் கடையை கொளுத்திய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

டாஸ்மாக் கடையை கொளுத்திய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
X
சிசிடிவி காட்சிகள்.
ஈரோட்டில் நள்ளிரவில் டாஸ்மாக் கடையை தீயிட்டு கொளுத்திய இருவரை, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர் குளம் பகுதியில் 3577 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை செய்பட்டு வருகிறது. இதனையடுத்து இன்று மதியம் வழக்கம்போல் கடையை திறக்க முயன்ற சூப்பர்வைசர் ராமசாமி, கடையின் முன்பகுதி தீ வைக்கப்பட்டிருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நள்ளிரவில் வந்த இருவர் கடையின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தீயில் சுமார் 55,800 மதிப்புள்ள 432 குவாட்டர் பாட்டிகள் உள்பட மொத்தம் 443 மதுபாட்டில்கள் தீயில் கருகியது தெரிய வந்தது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்