ஈரோடில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த பாமகவினர்

ஈரோடில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த பாமகவினர்
X

ஈரோடு மாநகராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாட்டு வண்டியில் வந்து  வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஈரோடு மாநகராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாட்டு வண்டியில் வந்து நூதன முறையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இன்று வேட்புமனு தாக்கலின் கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கலை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக ஈரோடு மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள், 48-வது வார்டில் ராஜேந்திரன், 47 வது வார்டில் தங்கராஜ், 31-வது வார்டில் பசுபதி, 32-வது வார்டில் உமாபாரதி, 33-வது வார்டில் மகேஸ், 56 வது வார்டில் சுரேஷ் ஆகியோர் மாட்டு வண்டியில் சூரம்பட்டியில் உள்ள 3ம் மண்டல அலுவலகத்திற்கு வந்து தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!