ஈரோட்டில் பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

ஈரோட்டில்  பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்
X

பிளாஸ்டிக் மறுசுழற்சி யாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்களுக்கு, மத்திய மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்

ஈரோட்டில் பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தலைவர் சித்திக் தலைமை வகித்தார். செயலாளர் தங்கராஜ், பொருளாளர் குமரேசன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத் தலைவர் மாரியப்பன், ஈரோடு மாவட்ட சிறுதொழில் சங்க தலைவர் திருமூர்த்தி, துணைப் பொருளாளர் கணேசன்ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஈரோடு பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர் சங்கத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தொழில் செய்வதற்காக பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்பு தனி இடத்தை தமிழக அரசு ஒதுக்கித் தரவேண்டும். சாலையோரம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்துவரும் பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

மறுசுழற்சி செய்யக்கூடிய அனைத்து உறுப்பினர்களும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு மறுசுழற்சி தொழிலை செய்ய வேண்டும். தளர்வுகளுடன் கூடிய சான்றிதழை பெற்று தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு வட்டாரத்தில் முக்கிய பகுதிகளான கருங்கல்பாளையம், ஈரோடு காவிரி ரோடு, கே.என்.கே.சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் சாலைகளை மிக விரைவாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளி-ட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக துணைத் தலைவர் பரமசிவம் வரவேற்றார்.துணைப் பொதுச் செயலாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஈரோடு பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Tags

Next Story