காவிரி துணை ஆறுகள் வளம் மீட்பு குறித்த திட்டமிடல் கூட்டம்

காவிரி துணை ஆறுகள் வளம் மீட்பு குறித்த திட்டமிடல் கூட்டம்
X

ஈரோட்டில் நடைபெற்ற ஆறுகள் வளம் மீட்பு குறித்த திட்டமிடல் கூட்டம்

தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் சார்பில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் வளம் மீட்பு திட்டமிடல் குறித்த கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது

தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் வளம் மீட்பு கூட்டம் ஈரோடு காளைமாட்டு சிலையில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது.

தண்ணீர் மனிதன் என அழைக்கப்படும் இராஜேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆறுகள் மாசுபடுதலை தடுப்பது குறித்த யுக்திகள், ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர்வரத்து மற்றும் போக்கு கால்வாய் மாசுபாடுகளை தடுத்தல், நீர் மேலாண்மை குறித்த கல்வியை கிராமங்கள் தோறும் நடைமுறை படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை நடைபெற்றது

Tags

Next Story
ai marketing future