சிவகிரி அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சிவகிரி அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
X

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அதிமுக பிரமுகர் வீடு.

சிவகிரி அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகிரி அருகே உள்ள அஞ்சூர் ஊராட்சி முத்து கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் விஜயலட்சுமி. இவர்கள் அதிமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பகுதியான இவர்களின் பண்ணை வீடு உள்ளது. பண்ணை வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை 3:30 மணிக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தர்ராஜன் என்பவரின் பண்ணை வீட்டில் விவசாய வேலை செய்துவரும் ஆறுமுகம் என்பவர் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபோது, நாய் குரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து பார்த்தார்.

அப்போது பண்ணை வீட்டின் வெளிப்புற கதவு அருகே தீ எரிவதைப் பார்த்தபோது, யாரோ மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது. உடனடியாக ஆறுமுகம் வீட்டின் உரிமையாளர் சுந்தரராஜன் அவர்களுக்கு தகவல் கொடுக்கவே சுந்தரராஜன் மேற்படி போலீசில் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இப்பகுதியை ஆய்வு செய்தனர். நேற்று காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட எஸ்பி சசிமோகன் பெருந்துறை டிஎஸ்பி சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை ஆய்வு செய்து தொழிலாளி ஆறுமுகத்திடம் தகவலை கேட்டறிந்தனர்.

இதில் பண்ணை வீட்டின் முகப்பு பகுதி மற்றும் பண்ணை வீட்டின் வாசல் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பகுதியை போலீஸ் மோப்ப நாய் பவானி ஆய்வு செய்தது. இது தொடர்பாக சிவகிரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future