நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத் தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு

நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத் தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு
X

ஹரிபாபு.

நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத்தர வேண்டும் என எ ஸ்.பி. அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.

ஈரோடு எஸ் .பி .அலுவலகத்திற்கு ஞானிபாளையம் பகுதியை சேர்ந்த இந்துமதி (வயது 42) என்பவர் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது கணவர் பெயர் ஹரிபாபு. பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வந்தோம். இந்நிலையில் கடந்த 15.2.2019 ஆம் ஆண்டு திடீரென எனது கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அவர் வெளியே செல்லும் போது 30 ஆயிரம் பணம், 7 பவுன் நகை மற்றும் எனக்கு சொந்தமான 1800 சதுர அடி நில பத்திரத்தையும் கொண்டு சென்றார். இன்று வரை எனது கணவர் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார் எங்கு போனார் என தெரியவில்லை. இதுகுறித்து வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இன்றுவரை போலீசாரும் எனது கணவரை கண்டுபிடித்து தரவில்லை. போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து கேட்டால் எந்த ஒரு பதிலும் சொல்வதில்லை. வீட்டில் இருக்கும் ஆடுகளை விற்று செலவு செய்து வருகிறேன். எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாயமான எனது கணவரையும், நகை பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!