பொங்கல் பண்டிகையின்போது சேவல் சண்டை நடத்த அனுமதிகோரி மனு

பொங்கல் பண்டிகையின்போது சேவல் சண்டை நடத்த அனுமதிகோரி மனு
X

இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்க வந்தவர்கள்.

சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பாக எஸ்பி சசி மோகனிடம் மனு அளிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையின்போது வீரதீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிப்பது போல் ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பாக எஸ்பி சசி மோகனிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் சேவல் சண்டை தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கொரேனா வழிகாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து பண்டிகை தினமான தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் ஆகிய நாட்களில் மட்டும் அனுமதி அளிக்க வேண்டும். இந்நிகழ்ச்சியின்போது இந்து மக்கள் கட்சி சார்பாக மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் மனு அளித்தார். உடன் இந்து மக்கள் கட்சி திருப்பூர் கோட்ட பொறுப்பாளர் சுரேஷ், இந்து மக்கள் கட்சி தொழிற்சங்க தலைவர் ஈஸ்வரன், மாவட்ட பொதுச்செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரவீன், பவானி ஒன்றிய செயலாளர் யுவராஜ் ஆகியோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகனிடம் நேரில் சந்தித்து அனுமதி வழங்குமாறு மனு அளித்து கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!