ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 23 அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மனு

அம்பேத்கர் சிலை வைக்க வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 23 அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மனு அளித்தனர்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று 23 அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் சட்ட மேதை அம்பேத்கர் சிலையையும் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 23 அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அம்பேத்கர் படத்தை கையில் ஏந்தி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பினர்.

Tags

Next Story