குடியிருப்பு பகுதியில் செயல்படும் குப்பை கிடங்கை அகற்ற கோரி லாரியை சிறை பிடித்த மக்கள்

குடியிருப்பு பகுதியில் செயல்படும் குப்பை கிடங்கை அகற்ற கோரி லாரியை சிறை பிடித்த மக்கள்
X

லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

குடியிருப்பு பகுதியில் செயல்படும் குப்பை கிடங்கை அகற்ற கோரி பொது மக்கள் லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு ரங்கம்பாளையம் அடுத்த ஜீவா நகர், ரயில் நகர், ஜெ ஜெ நகர் ஆகிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு 3000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதியின் அருகாமையில் மாநகராட்சி சார்பில் குப்பை கிடங்கு இயங்கி வருகிறது. 4 கடந்த மாதங்களாக இயங்கி வரும் இந்த குப்பை கிடங்கில் இந்த பகுதி மட்டுமில்லாமல் 13 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி லாரிகள் மூலம் இங்கு கொட்டுவதால், ஈ, கொசுத் தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு ஈடுபடுவதாக கூறியும் மாநகராட்சி குப்பை கிடங்கை முற்றுகையிட்டும் குப்பை லாரியை சிறை பிடித்தும் மாநகராட்சி கண்டித்தும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, குப்பை கிடங்கு தொடர்பாக பல முறை மாநகராட்சி அதிகாரிகள் இடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. இதனையடுத்து வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமியிடம் புகார் அளித்ததை தொடர்ந்து ஒரே ஒரு நாள் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்து. இந்நிலையில் மீண்டும் மாநகராட்சியை சேர்ந்தவர்கள் இங்கு குப்பைகளை கொட்டி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் செயல்படும் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா