ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: ஈரோடு ஆட்சியர் துவக்கி வைப்பு

ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மத்திய அரசின் போஷன் அயான் திட்டத்தின் மூலம் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிககப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டம் சார்பில், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை பிரச்சார வாகனம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்வாகனத்தின் மூலம், ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்படுகிறது. மேலும் வாகனத்தில் போஷன் அபியான் குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கள் அடங்கிய காணொளி காட்சிகள் ஔிபரப்பப்படுகிறது.

மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து தகவல்கள், கொரானா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம், கொரானா தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய காட்சிகளை மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கிராமங்கள் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags

Next Story
ai solutions for small business