ஈரோடு சிந்தாமணி பசுமை அங்காடியில் தக்காளி விற்பனை இல்லை: பொதுமக்கள் ஏமாற்றம்

ஈரோடு சிந்தாமணி பசுமை அங்காடியில் தக்காளி விற்பனை இல்லை: பொதுமக்கள் ஏமாற்றம்
X

ஈரோடு சிந்தாமணி பசுமை அங்காடி.

ஈரோடு சிந்தாமணி பசுமை அங்காடியில் மலிவு விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக தக்காளி விலை தாறுமாறாக எகிறியுள்ளதால், பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரோடு சிந்தாமணி பசுமை அங்காடியில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், குறைந்த விலைக்கு தக்காளி கொள்முதல் செய்ய முடியாமல் ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் திணறி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நாமக்கல் சேலம் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களி உள்ள விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு தக்காளியை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் யாரும் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்ய முன்வரவில்லை என்பதுடன், தக்களி இல்லை என விவசாயிகள் கூறுவதாகவும், தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து தக்காளியை கொள்முதல் செய்து இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள், குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!