புதிய அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தேர்வு: மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி

புதிய அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தேர்வு: மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி
X

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி.

கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளியில் புதிய அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அந்தியூர், அம்மாபேட்டை, நம்பியூர், சத்தியமங்கலம், தாளவாடி, தூ.நா.பாளையம் ஆகிய 6 ஒன்றியங்களில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகள் தங்கி கல்வி பயின்றிட கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் டி.என்.பாளையம் ஒன்றியம், நஞ்சை புளியம்பட்டியில் செயல்பட்டு வரும் கேஜிபிவி பள்ளிக்கு புதிய அரசு சாரா தொண்டு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.

எனவே, இப்பள்ளியை நடத்திட விருப்பமுடைய அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 10.12.2021

விண்ணப்பம் பெற வேண்டிய முகவரி:

கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்டத் திட்ட அலுவலகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், ஈரோடு தொடர்புக்கு 0424-2265556, 9788858246

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!