பெண்னின் திருமண வயது 21 ஆக நிர்ணயிக்க நாடு முழுவதும் அதிருப்தி: அப்துல் ரகுமான்

பெண்னின் திருமண வயது 21 ஆக நிர்ணயிக்க நாடு முழுவதும் அதிருப்தி: அப்துல் ரகுமான்
X

வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான்.

மத்திய அரசின் முடிவுக்கு நாடு முழுவதும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான அப்துல் ரகுமான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஈரோடு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் பெண்களின் திருமண வயதை 21 ஆக நிர்ணயிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு நாடு முழுவதும் பெண்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனால் திருமணம் தள்ளி போகுதல், வாக்கு அளிப்பதில் சிக்கல், சொத்துக்கள் பிரித்து எழுதும் போது கிடைக்காத சூழ்நிலை, 21 வயது வரை சிறுமி என்ற நிலை நீட்டிப்பு போன்ற பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

வக்பு வாரிய சொத்துக்கள் மீட்டு எடுப்பதில் அராஜகம் இன்றி முறைப்படியும், சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் ஆரீப், மற்றும் நூர் சேட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story