100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை இரவோடு இரவாக அகற்றிய மர்ம நபர்கள்

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை இரவோடு இரவாக அகற்றிய மர்ம நபர்கள்
X

சேதமடைந்த கோவில்.

ஈரோட்டில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை இரவோடு இரவாக மர்ம நபர்கள் அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இக்கோவிலை நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் இயந்திரத்தை பயன்படுத்தி கோவிலை முழுமையாக அகற்ற முயசித்துள்ளனர். பொதுமக்கள் நோட்டம் விடுவதை அறிந்த மர்ம நபர்கள் முயற்சியை பாதியில் விட்டு சென்று விட்டனர்.

அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கோவில் இருந்த இடம் குமாரசாமி என்பவருக்கு சொந்தமானது என்றும் ஓராண்டுக்கு முன்பே கோவில் நிலம் சம்பந்தமாக பிரச்சனை இருந்ததாகவும், நேற்று நள்ளிரவில் போர்வெல் இயந்திரத்தின் சட்டத்தைப் பயன்படுத்தி கோவிலை அகற்றி புறம்போக்கு நிலத்தில் வைத்து விட்டு பழமை வாய்ந்த வேப்பமரத்தை அகற்றியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குமாரசாமி மற்றும் அந்த நிலத்துக்கு சொந்தமான மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!