ஈரோட்டில் இஸ்லாமிய புதுமணத்தம்பதிகள் பங்கேற்ற சமத்துவ தீபாவளி
ஈரோட்டில் கொண்டாடப்படும் தீபாவளி உற்சாகம்.
ஈரோட்டில் இஸ்லாமிய புதுமணத்தம்பதிகள் பங்கேற்ற சமத்துவ தீபாவளி நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இவர்களில் புதுமணத் தம்பதிகள் தங்களது தலைதீபாவளியை குடும்பத்தினரோடு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதில் சிறப்பாக இஸ்லாமிய புதுமணத் தம்பதிகளும் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் தலை தீபாவளியை கொண்டாடினர். இது அனைத்து மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சிறுவர்கள் வீட்டு வாசல்களில் பட்டாசுகளை வெடித்து தங்களது அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி குடும்பத்தோடு கோயில்களுக்குச் சென்று பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகையொட்டி பெரும்பாலான கோயில்களில் சிறப்பு பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களுக்கும் ஏராளமான பொதுமக்கள் செல்வார்கள் என்பதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருந்தே பொதுமக்கள் தீபாவளிக்காக தயாராகி வந்தனர். இதனால் கடைவீதிகளில் கடந்த 5 நாள்களாக கூட்டம் அலைமோதியது. ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாட திட்டமிட்டதால் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது,
இந்நிலையில் மக்கள் ஆர்வடமுன் எதிர்பார்த்த தீபாவளி உற்சாகமாக பிறந்துவிட்டதால், இனி வாழ்க்கையில் எல்லாம் நலமே என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu