27 வது வார்டு பகுதியில் ஆய்வு செய்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா

27 வது வார்டு பகுதியில் ஆய்வு  செய்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா
X

காமராஜர் வீதியில் ஆய்வு செய்த எம்எல்ஏ திருமகன் ஈவேரா.

ஈரோடு மாநகராட்சி இருபத்தி ஏழாவது வார்டு பகுதியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆய்வு செய்தார்.

ஈரோடு மாநகராட்சி இருபத்தி ஏழாவது வார்டு காமராஜ் வீதியில் உள்ள சாக்கடையை கடந்த 9 ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழைபெய்து வருவதால் மழைநீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளதை இப்பகுதியின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா எம்எல்ஏ இன்று ஆய்வு செய்தார். மேலும் நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு மாநகராட்சி அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.

பிறகு ஈரோடு காமராஜர் வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியின் சத்துணவு கூடத்திற்குச் சென்று குழந்தைகளுக்கு பரிமாறப்படும் சத்துணவை ஆய்வு செய்து அந்த உணவை சாப்பிட்டு பார்த்தார். தலை

௦௩.மை ஆசிரியை நவரத்தினா இப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். பின் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள மிகப் பழமையான ஆஞ்சநேயர் கோயிலை புனரமைக்க உத்தர விடுமாறு அந்த பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை புனரமைக்க முயற்ச்சி செய்கிறேன் என்று எம்எல்ஏ உறுதியளித்தார். பின் காமராஜ் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, அழகிரி வீதி, ராமசாமி வீதி, பிருந்தாச்சாரி வீதி, வெங்கடாஜலம் வீதி, சொக்கநாத வீதி, செங்கோட சந்து போன்ற வீதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். கடந்த 10 ஆண்டுகளாக போடப்படாத இச்சாலைகள் என்று பொதுமக்கள் மற்றும் அப்பகுதி வியாபாரிகள் புகாளித்தனர். இதனையடுத்து விரைவில் சாலைகள் போடப்படும் என்று உறுதியளித்தார்.

Tags

Next Story