ஈரோட்டில் துவக்கப்பள்ளி மாணவர்களை வரவேற்ற அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் துவக்கப்பள்ளி மாணவர்களை  வரவேற்ற அமைச்சர் முத்துசாமி
X

குழந்தைகளுக்கு புத்தகங்களை வழங்கிய அமைச்சர் முத்துசாமி.

600 நாட்களுக்கு பிறகு மழலையர்களை அமைச்சர் முத்துசாமி புங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்தததையடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவிகள் பள்ளிக்கு வரத்தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர்களின் வருகையொட்டி வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட ஆடசியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சயில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளித்தார். மேலும் அப்பள்ளியின் வகுப்பறைகளை ஆய்வு செய்த அமைச்சர் மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மாவட்டத்தில் 1306 பள்ளிகள் உள்ளதாகவும் இன்றைய தினம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 157 மாணவ மாணவிகள் வர இருப்பதாகவும் தெரிவித்தார் . மலை கிராம பள்ளிகளில் தேவையான முன்னெச்சிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஏதேனும் குறைபாடுகள் தெரிய வந்தால் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை ஈரோடு மாவட்டத்தில் முதல் டோஸ் 73 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் இரண்டாம் டோஸ் 33 சதவீதம் நிறைவடநை்ததோடு மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story