தீ விபத்து நிகழ்ந்த கடைகளை அமைச்சர் முத்துசாமி ஆய்வு

தீ விபத்து நிகழ்ந்த கடைகளை அமைச்சர் முத்துசாமி ஆய்வு
X

தீ விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சர் முத்துசாமி.

ஈரோடு பேருந்து நிலையம் அருகே பயங்கர தீ விபத்து நிகழ்ந்த கடைகளை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு பேருந்துநிலையம் அருகே சத்தி சாலையில் ஏராளமான ஹார்டுவேர் நிறுவனங்கள், கட்டிடங்களுக்கு தேவையான மர பொருட்கள் விற்பனையகம், டைல்ஸ், எலக்கட்ரிக்கல் பொருட்கள் மொத்த விற்பனை செய்யும் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான ஹார்டுவேர் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது மளமளவென அந்த கடை முழுவதும் பரவி அருகில் உள்ள ஸ்ரீதர் மற்றும் ராமசந்திரன் ஆகியோருக்கு சொந்தமான கட்டிட பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் மற்றும் மர பொருட்கள் இருப்பு வைத்திருந்த குடோனிலும் வேகமாக பரவியது.

இதில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. இதனையடுத்து இன்று தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் சம்பவம் குறித்து கடை உரிமையாளர்களிடம் கேட்டறிந்த அவர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்