திருக்கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர் முத்துசாமி

திருக்கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர் முத்துசாமி
X

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர் முத்துசாமி. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருக்கோயில் பூசாரிகள், பணியாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி புத்தாடைகள் வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூபாய் 10 கோடி செலவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகளுக்கு, பொங்கல் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

ஈரோட்டில், திண்டல்மலை முருகன் கோவிலில், இன்று அமைச்சர் அமைச்சர் முத்துசாமி, அர்ச்சகர்கள் பூசாரிகள் உள்ளிட்ட 381 நபர்களுக்கு பொங்கல் புத்தாடைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து திண்டல்மலை முருகனை தரிசித்தார். இந்நிகழ்வில், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி, இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!