மகளிர் சுய உதவி குழுக்களுக்கு காசோலை வழங்கிய அமைச்சர்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு காசோலை வழங்கிய அமைச்சர்
X

மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு காசோலை வழங்கிய அமைச்சர்.

ஈரோட்டில் 1498 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்தவர்களுக்கு 67 கோடியே 15 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர் முத்துச்சாமி வழங்கினார்.

ஈரோட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. ஈரோட்டில் 1498 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 21,985 மகளிர்களுக்கு 67 கோடியே 15 லட்சத்திற்கான காசோலைகளை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி வழங்கினார்.

விழாவிற்கு பின்பு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பெண்கள் குடும்பத்தை நிர்வகிக்கவும், தொழில் செய்து வருமானம் ஈட்டவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், 1989ம் ஆண்டு கலைஞர் மகளிர் சுய உதவி குழுக்கள் துவக்கி வைத்தார். அன்று உள்ளாட்சி துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்து, இன்றை முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் பல மணி நேரம் நின்று கொண்டே கடன் உதவிகளை வழங்கினார்.

இன்று வரை இந்த குழுக்கள் மென்மேலும் வளர்ந்து இன்று புத்துணர்வு பெற்றுள்ளது. மகளிர் சுய உதவி குழுவினர் செயல்பாடுகள், உற்பத்தி முறை, தயாரிப்புகள், ஆகியவற்றை மற்ற பெண்களும் அறிந்து செயல்பட துவங்கினால் மிகப் பெரிய வெற்றியை அடையலாம் என தெரிவித்தார்

இந்த நிகழ்க்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார், அந்தியூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா, மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரஸ்வதி மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி