எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா: மரியாத்தை செலுத்திய மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம்

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா: மரியாத்தை செலுத்திய மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம்
X
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த கே.வி.ராமலிங்கம். 
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கே.வி. ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள எம்ஜிஆர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிமுக கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் காலையிலேயே அங்கு திரளாக கூடி இருந்தனர்.

கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, ஈரோடு மாநகராட்சியின் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் ஆகியோர் பன்னீர் செல்வம் பூங்கா வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். முழு உருவ சிலைக்கும், அந்த சிலைக்கு அருகே இருந்த ஜெயலலிதா சிலைக்கும் கே.வி. ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது கூடி இருந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர். வாழ்க, புரட்சித்தலைவி வாழ்க என்று கோ‌ஷமிட்டனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு கே.வி. ராமலிங்கம் மற்றும் தென்னரசு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!