சுங்கக்கட்டணம்: ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு காய்கறி மாலையுடன் வந்த வியாபாரிகள்

சுங்கக்கட்டணம்: ஈரோடு  கலெக்டர் அலுவலகத்துக்கு காய்கறி மாலையுடன் வந்த வியாபாரிகள்
X
சுங்கக்கட்டண பிரச்னையை கண்டித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு காய்கறி மாலையுடன் வந்த வியாபாரிகளால் பரபரப்பு

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்துகொண்டு இருந்தது அப்போது. ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சிலர் தங்களது கழுத்துகளில் காய்கறி மாலை அணிந்தும், தலையில் காய்கறி மூட்டைகளை சுமந்தும் நூதனமான முறையில் மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் டி ஆர்.ஓ. முருகேசனிடம் மனுகொடுத்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கூடுதல் சுங்க கட்டணம் வசூலித்ததால் பணம் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டதன் காரணமாக 8 மாதங்களுக்கு முன்பு தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் போராட்டம் நடத்தினோம். இதன் விளைவாக மாவட்ட கலெக்டர் உத்தரவு படி மாநகராட்சி சுங்க கட்டண ரசீதில் இருந்த தொகையை சிறிது காலம் குத்தகைதாரர் வசூல் செய்தார். இந்நிலையில் மீண்டும் பழையபடி சுங்க கட்டண ரசீது கொடுக்காமல் அதிக பணம் வசூல் செய்து வருகிறார்கள்.

மாநகராட்சியின் நிர்ணயித்த தொகையை தான் தருவோம் என்று சொன்னால் கடையை உடனடியாக காலி செய்யுமாறு சொல்கிறார்கள். இதனால் விவசாயிகள் சிறு வியாபாரிகள் பணம் கொடுக்க முடியாமல் வேதனைப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடக்கவிருக்கும் ஏலததிற்கு முன் பணமே ரூ.1 கோடி என்னும் போது ஏலம் முடிவில் இன்னும் எவ்வளவோ போகுமோ என தெரியவில்லை. அவ்வளவு பணம் கட்டி ஏலம் எடுத்ததால் வியாபாரிகள் விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே நேரடியாக மாநகராட்சியே நேரடியாக வசூல் செய்தால் வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself