வீரப்பன்சத்திரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது

வீரப்பன்சத்திரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.

வீரப்பன்சத்திரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரியசேமூர், கள்ளான் காடு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக சந்தேகப்படும்படி முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த முதியவர் அதே பகுதியை சேர்ந்தவ கிருஷ்ணன் (வயது 76) என்றும், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வீரப்பன் சத்திரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த முதியவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!