ஈரோடு அருகே நிலக்கரி ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

ஈரோடு அருகே நிலக்கரி ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
X

விபத்துக்குள்ளான லாரி.

லாரியில் இருந்த நிலக்கரி முழுவதும் வயல்வெளியில் சிதறி சேதமடைந்தது.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்து மெட்டீரியல்கள் வருகின்றன. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது.லாரியை தூத்துக்குடியைச் சேர்ந்த சேர்ந்தவர் ஓட்டி வந்தார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி கருங்கல்பாளையத்தில் இருந்து தனியார் மில்லுக்கு செல்லும் வழியில் உள்ள மண் சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனையடுத்து லாரியில் இருந்த நிலக்கரி முழுவதும் வயல்வெளிகளில் சிதறி சேதமடைந்தது. இதனைதொடர்ந்து கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future