"அமித்ஷாவின் உருவ பொம்மை எரிக்க முற்பட்ட விடுதலை சிறுத்தைகள் – போலீசாரின் தடை!"
சத்தியமங்கலத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் சத்தியமங்கலம், டிச.21: ஈரோடு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரை அவமதிப்பு செய்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மாவட்ட செயலாளர் மிசா தங்கவேல் தலைமையில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானிசாகர் தொகுதி செயலாளர் பொன். தம்பிராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி கண்டன கோஷமிடப்பட்டது. அப்போது விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீரென அமித்ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதைக் கண்ட போலீசார் உடனடியாக உருவ பொம்மையை எரிக்க விடாமல் தடுத்தனர்.
இதனால பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சிறுத்தை சிவா,வீர துரைசாமி, ரமேஷ் வளவன், சுப்பிரமணியம், துரை ஆறுமுகம்,திருமா பிரபு,விஜயன்,சிறுத்தை சுப்பிரமணி,கலாமணி,மூர்த்தி,ஈஸ்வரன், பழனிச்சாமி, மதன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம், டிச.21: ஈரோடு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரை அவமதிப்பு செய்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மாவட்ட செயலாளர் மிசா தங்கவேல் தலைமையில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானிசாகர் தொகுதி செயலாளர் பொன். தம்பிராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி கண்டன கோஷமிடப்பட்டது. அப்போது விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீரென அமித்ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதைக் கண்ட போலீசார் உடனடியாக உருவ பொம்மையை எரிக்க விடாமல் தடுத்தனர்.
இதனால பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சிறுத்தை சிவா,வீர துரைசாமி, ரமேஷ் வளவன், சுப்பிரமணியம், துரை ஆறுமுகம்,திருமா பிரபு,விஜயன்,சிறுத்தை சுப்பிரமணி,கலாமணி,மூர்த்தி,ஈஸ்வரன், பழனிச்சாமி, மதன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu