எஸ்.கே.எம் நிறுவனத்திற்கு சொந்தமான 11 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய இடம்.
1981 ம் ஆண்டு சிறிய அளவில் முட்டை பண்ணையாக தொழில் துவங்கிய இந்த நிறுவனமானது, படிப்படியாக வளர்ச்சி அடைந்து முட்டை உற்பத்தி, மாட்டுத்தீவனம், முட்டை பவுடர் ஏற்றுமதி, சித்தமருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது எஸ் கே எம் நிறுவனம்.
இந்த எஸ்.கே.எம் நிறுவனத்துக்கு சொந்தமான 11 க்கும் மேற்பட்ட இடங்களில் சென்னையிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு சோலார் பகுதியிலுள்ள எஸ்.கே.எம் அணிமல் ஃபுட்ஸ் & ஃபுட்ஸ் என்ற தலைமை அலுவலகம் உட்பட ஈரோடு காளைமாடு சிலை அருகே உள்ள எஸ் கே எம் சித்த மருத்துவமனை மற்றும் விற்பனையகம், சோளங்கபாளையத்தில் உள்ள முட்டை உற்பத்தி தொழிற்சாலை அலுவலகம், நஞ்சை ஊத்துக்குளி யில் உள்ள கால்நடை தீவன தொழிற்சாலை அலுவலகம், நிறுவனத்தின் உரிமையாளர்களான எஸ் கே எம் மயிலானந்தன், சிவக்குமார், சந்திரசேகரன் ஆகியோருக்கு சொந்தமான பெரியார் நகரில் உள்ள வீடு, மோளகவுண்டம்பாளையத்தில் உள்ள வீடு உள்ளிட்ட 11 இடங்களில், 11 குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்நிறுவனத்திற்கு சொந்தமான தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வானது பல கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா? என்பது குறித்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சோழங்க பாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டை பவுடர் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu