ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 60 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில்  60 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
X

ஈரோடு மாநகராட்சியில் 60 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று காலை நடந்தது.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 60 கவுன்சிலர்கள் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடந்தது. 22ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று காலை பதவி ஏற்றனர்.

ஈரோடு மாநகராட்சி மன்ற 60 கவுன்சிலர்களும் மாநகராட்சி மன்ற அரங்கில் இன்று காலை பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவையொட்டி புதிய கவுன்சிலர்களின் உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் கட்சியினர் பங்கேற்றார்கள். இதனால் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகம் விழாக்கோலம் பூண்டு இருந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!