ஆணவக் கொலையில் இருந்து காப்பாற்ற கோரி கணவன் காவல் நிலையத்தில் புகார்
மனு கொடுக்க வந்த செல்வம்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சலங்கை நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செல்வன், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். தனியார் நிறுவன ஊழியர். பவானி குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். இவரது மகள் இளமதியும், செல்வமும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்துள்ளனர். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இருவரும் திராவிடர் விடுதலை கழக மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில் கடந்த 2020 ஆண்டு பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டு தனியே வாழ்க்கை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் தகவல் அறிந்து இளம்மதியின் பெற்றோர் அடியாட்களை வைத்து செல்வனை ஜாதிப் பெயரை கூறி அடித்து துன்புறுத்தி இளமதியை கடத்திச் சென்றதாக்க கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையில் புகார் அளித்தும் விசாரணை நடைபெறவில்லை.
மேலும் தற்போது இளமதி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆணவக்கொலை செய்யக்கூடிய நிலையில் தற்போது இருப்பதாகவும், எனவே எவ்வித ஆபத்தும் இன்றி காப்பாற்றவும், தனது மனைவியை மீட்டு உரிய பாதுகாப்பு தருமாறு காவல் கண்காணிப்பாளரிடம் செல்வம் மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu