ஈரோட்டில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது

ஈரோட்டில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது
X

ஈரோட்டில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர். 

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடியை கண்டித்து, ஈரோட்டில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

அண்மையில், பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலத்திற்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக சென்றார். அப்போது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பஞ்சாப் காங்கிரஸ் அரசு செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டிக்கும் வகையில், பஞ்சாப் காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்யக்கோரி, ஈரோட்டில் நேற்று இந்து மக்கள் கட்சி சார்பில், ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று காலை இந்து மக்கள் கட்சியின் மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் பலர் ஈரோடு காளைமாடு சிலை அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ரயில் நிலையத்தை நோக்கி கோஷமிட்டபடி சென்றனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சூரம்பட்டி போலீசார், ரயில் நிலையம் பகுதியில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரயில் நிலையம் உள்ளே நுழைய முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Tags

Next Story
ai in future agriculture