ஈரோட்டில் பெய்த கனமழை: சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

ஈரோட்டில் பெய்த கனமழை: சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
X

ஈரோடு மரப்பாலம் பகுதி நேதாஜி வீதியில், மழைக்கு சேதமான வீடு.

ஈரோடு மரப்பாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக. வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.

ஈரோட்டில் பெய்த கனமழை காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார். ஈரோடு மரப்பாலம் பகுதி நேதாஜி வீதியை சேர்ந்த ராஜம்மாள் ( 75 ) என்ற மூதாட்டியின் மண் வீடு, நள்ளிரவு பெய்த கனமழையால் சேதமடைந்தது. இதில், ராஜம்மாள் உயிரிழந்தார்.

ராஜம்மாளின் மகன் ராமசாமி ( 48 ) என்பவரும், இடிபாடுகளில் சிக்கி படுகாயத்துடன் மீட்கப்பட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வ் செய்து, ஈரோடு மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!