ஈராேட்டில் முடி திருத்தும் தாெழிலாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

ஈராேட்டில் முடி திருத்தும் தாெழிலாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு
X

ஈரோடு 48வது வார்டு மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் சிவஞானம் வித்தியாசமான முறையில் முடி வெட்டிக் கொண்டே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ஈரோடு 48வது வார்டை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர் வித்தியாசமான முறையில் முடி வெட்டிக் கொண்டே வாக்கு சேகரித்து வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு 48வது வார்டைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர் வித்தியாசமான முறையில் முடி வெட்டிக் கொண்டே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சியில் நாற்பத்தி எட்டாவது வார்டு வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சிவஞானம் போட்டியிடுகிறார்.

இவர் அப்பகுதியில் 28 ஆண்டுகளாக முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக விருப்ப மனு அளித்து மாமன்ற உறுப்பினர் பதவிக்காக போட்டியிடுகிறார்.

அவரது கடைக்கு முடித்திருக்க வருபவர்களிடம் நான் இப்பகுதியில் மாமன்ற உறுப்பினர் பதவிக்காக போட்டியிடுகிறேன் எனக்கு ஆதரவு தாருங்கள் என கூறி தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!