புத்தாண்டை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோயிலில் கோமாதா பூஜை!

புத்தாண்டை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோயிலில் கோமாதா பூஜை!
X
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் பூஜையாக கோமாதா பூஜை நடைபெற்றது.

ஈரோடு : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் பூஜையாக கோமாதா பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மார்கழி மாத விழா குழுவினரின் சார்பில் மார்கழி பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் வழக்கமாக நடைபெறும் 6 கால பூஜைகள் மற்றும் புத்தாண்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அப்போது ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஏராளமான பக்தர்கள் தரிசனம்

நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் வந்திருந்தனர். சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை.

அதனால் வெளியூர்களில் இருந்து ஏராளமான கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த பக்தர்கள் அடிவாரம் மற்றும் சந்தை பேட்டையில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு படிக்கட்டுகள் வழியாக நடந்து சென்று முருகனை தரிசித்தனர்.

முருகன் சன்னதி பின்புறம் உள்ள வள்ளி - தெய்வானை மற்றும் தன்னாசியப்பன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags

Next Story