/* */

ஈரோட்டில் சிறுமியை கடத்தி திருமணம்: தந்தை - மகன் போக்சோவில் கைது

ஈரோடு அருகே 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் தந்தையுடன் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் சிறுமியை கடத்தி திருமணம்: தந்தை - மகன் போக்சோவில் கைது
X

கைதான முருகேசன் அவருடைய அவரது தந்தை ரத்தினம்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்த வெள்ளோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர், தன்னுடைய 16 வயது மகளை கடந்த 6-ந்தேதி முதல் காணவில்லை எனவும், 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் தனியாக இருந்ததாகவும், கடந்த 7ந் தேதி வெள்ளோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இது குறித்து வெள்ளோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டையை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் கட்டிட தொழிலாளியான முருகேசன் (20) என்பவர் காணாமல்போன 16 வயது சிறுமியுடன் வெள்ளோடு காவல்நிலையத்தில் சரணடைந்தார். முருகேசனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது முருகேசன், சிறுமியை கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்ததாகவும், கடந்த 6-ந் தேதி சிறுமியை அழைத்து கொண்டு மேட்டூரில் உள்ள தனது தந்தையிடம் ரத்தினத்திடம் சென்று, ரத்தினம் வழங்கிய அறிவுரையின்படி, மறுநாள் 7-ந் தேதி எடப்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமியை அழைத்து சென்றார். பின்னர் அங்கு கிட்டாம்பட்டி என்ற ஊரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டதாக முருகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் முருகேசனிடமும், சிறுமியிடமும் காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை அவரது வீட்டுக்கு தெரியாமல் கடத்திச் சென்று திருமணம் செய்ததில் முருகேசனின் தந்தை ரத்தினத்துக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வெள்ளோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகேசன் மற்றும் அவரது தந்தை ரத்தினத்தையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான முருகேசன் அவருடைய அவரது தந்தை ரத்தினத்தையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த இந்த வழக்கில் தொடர்புடைய முருகேசனின் அண்ணன் பூபதி தலைமறைவாகியுள்ளார்.

Updated On: 10 Feb 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  4. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  5. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  6. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  7. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  8. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  10. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி